#Breaking:ஊரகப்பகுதிகளில் “நமக்கு நாமே திட்டம்”;ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை!
தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் “நமக்கு நாமே” திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை உட்பட அனைத்து மாநகராட்சிகள்,நகராட்சிகளில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் ‘நமக்கு நாமே திட்டம்‘ செயல்படுத்துவதற்கான அரசாணையை ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து,ஊரகப்பகுதிகளில் ரூ.100 கோடியில் கலைஞரின் நமக்கு நாமே திட்டம் மீண்டும் துவக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,தமிழகம் முழுவதும் உள்ள ஊரகப்பகுதிகளில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான நமக்கு நாம திட்டத்தை (என்என்டி) செயல்படுத்த பட்ஜெட் ஒதுக்கீடான ரூ.100 கோடியில் 50% நிதியை(ரூ.50 கோடியை) ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.