#BREAKING: ஒரு மாத பரோலில் நளினி விடுவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஒரு மாத பரோலில் விடுவிப்பு.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை கவனித்துக்கொள்ள நளினியை பரோலில் விடுவிக்குமாறு தாய் பத்மா கோரிக்கை வைத்த நிலையில், பரோல் வழங்கப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவர் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். தனது உடல்நிலையை கவனிக்க நளினிக்கு ஒருமாத பரோல் வழங்க வேண்டும் என்று நளினியின் தாயார் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு இன்று முதல் 30 நாட்கள் பரோல் வழங்க முடிவு செய்யப்பட்ட நிலையில், இன்று நளினி பரோலில் வெளியே வந்தார். கடைசியாக, நளினி 2019-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி ஒரு மாத பரோலில் வெளிவந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

TNBudget 2025 : மெட்ரோ ரயில் விரிவாக்கம்… 1,125 புதிய மின்சார பேருந்துகள்.!

TNBudget 2025 : மெட்ரோ ரயில் விரிவாக்கம்… 1,125 புதிய மின்சார பேருந்துகள்.!

சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…

5 minutes ago

TNBudget 2025 : 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்…

10 minutes ago

தமிழக பட்ஜெட் 2025 : 9 இடங்களில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள்… வேலைவாய்ப்பு குறித்த குட் நியூஸ்!

சென்னை :  சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…

38 minutes ago

தமிழக பட்ஜெட் 2025 : சென்னையில் புதிய நீர்த்தேக்கம்… ரூ.360 கோடி ஒதுக்கீடு!

சென்னை : சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…

1 hour ago

TNBudget 2025 : புதிய கல்லூரிகள், AI, சதுரங்கம்.., மாணவர்களுக்கான அறிவிப்புகள்!

சென்னை : தமிழக அரசின் 2025 - 2026-ன் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் மாநில…

1 hour ago

விடியல் பயண திட்டம் முதல் மாணவியர் விடுதிகள் வரை! மகளிருக்கு என்னென்ன அறிவிப்புகள்?

சென்னை : 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை இன்று காலை 9.30 அளவில் தாக்கல்…

2 hours ago