#BREAKING: “எனது விலைப்பட்டியல் எனது உரிமை” திட்டம்! – அமைச்சர் மூர்த்தி அறிவிப்பு

வணிக வரி, பதிவுத்துறை அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது என அமைச்சர் தகவல்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-22-ஆம் ஆண்டிற்கான வணிக வரி மற்றும் பதிவுத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய வணிகவரி & பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி,”எனது விலைப் பட்டியல் எனது உரிமை” என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் மக்கள் தாங்கள் பெறும் பொருளுக்கான விலைபட்டியலை கேட்டுப்பெற “எனது விலைப்பட்டியல் எனது உரிமை” திட்டம் செயல்படுத்தும் எனவும் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள GST மென்பொருள் வாங்கி பயன்படுத்தப்படும். வணிகவரித்துறையில் வரி ஏய்ப்பை தடுப்பதில் உதவுவோருக்கு வெகுமதி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். பதிவுத்துறையில் கட்டிடக்கலை பணி மேற்கொள்வதற்காக பொறியியல் பட்டதாரிகளுக்கு “களப்பணி மேற்பார்வையாளர் உரிமம்” வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் திருமணச் சான்றிதழில் திருத்தம் செய்ய இணைய வழியாக விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் எனவும் அறிவித்தார்.
இதன்பின் பேரவையில் பதிலுரையில் பேசிய அமைச்சர், பதிவுத்துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள், தவறான ஆவணப் பதிவுகளை கண்டறிந்து சரி செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. வணிக வரி, பதிவுத்துறை அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த ஆண்டுகளை விட வணிக வரித் துறையில் வருவாய் அதிகரித்துள்ளது. போலி பட்டியல் தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
அலுவலகங்களில் பணியாற்றும் பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான சனிக் கிழமையும் சார் பதிவாளர் அலுவலகம் செயல்படும். பதிவுத் துறையில் ஆவண எழுத்தர் உரிமங்கள் புதிதாக வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும், அரசின் முயற்சி காரணமாக 36 ஆயிரத்து 952 வணிகர்கள் புதிதாக தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர் என வணிகவரித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025