#Breaking : கையில் வேலுடன் புறப்பட்ட முருகன்! தடையை மீறி தொடங்கப்பட்ட வேல் யாத்திரை!
தடையை மீறி வேல் யாத்திரை தொடங்கியது.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர்-6ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரையை நடத்த தடை விதிக்குமாறு பல்வேறு அரசியல் கட்சியினரும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் இந்த யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், பாஜக சார்பில் தடையை மீறி வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், திருத்தணி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரபட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக மாநில பாஜக தலைவர் எல்.முருகன், வேல் யாத்திரையை தொடங்க, கடவுள் முருகனை வழிபட கையில் வேலுடன் புறப்பட்டார். இந்நிலையில், தற்போது இவர் வேலுடன் காரில் சென்று கொண்டிருக்கிறார்.