#Breaking : ம.நீ.ம வேட்பாளர் பொன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி…!
சென்னை அண்ணா நகர் தொகுதி, ம.நீ.ம வேட்பாளர் பொன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணா நகர் தொகுதி, ம.நீ.ம வேட்பாளர் பொன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக, தேர்தல் அறிக்கை வெளியிடும் போது, கமலஹாசனுடன் பொன்ராஜும் இருந்துள்ளார்.ஏற்கனவே வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ் பாபு கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பொன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.