#BREAKING: மு.க.ஸ்டாலின் அமைச்சரவை பட்டியல் வெளியானது..!
மு.க.ஸ்டாலினுடன் 34 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்கயுள்ள அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியானது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பெறுப்பேற்கவுள்ளார். நேற்று காலை 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க ஸ்டாலின் சந்தித்து முதல்வர் பதவிக்கான உரிமையை கோரினார்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மு.க ஸ்டாலின் ஆட்சி அமைக்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார். ஸ்டாலின் இல்லத்தில் ஆளுநரின் செயலாளர் ஆனந்தராவ் படேல் இதை தெரிவித்தார். இதனால், நாளை காலை 9 மணிக்கு தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கயுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ளனர். ஆளுநர் மாளிகையில் ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். எளிய முறையில் நடக்கும் பதவியேற்பு நடைபெறயுள்ளது.
இந்நிலையில், நாளை முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்க உள்ள நிலையில் மு.க.ஸ்டாலினுடன் 34 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்கயுள்ள அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியானது.
-
- துரைமுருகன் – சிறுபாசனத்துறை,
- கே.என்.நேரு – நகராட்சி நிர்வாகம் துறை ,
- பெரியசாமி – கூட்டுறவுத்துறை ,
- எ.வ.வேலு – பொதுப்பணித்துறை ,
- பொன்முடி – உயர்கல்வித்துறை,
- எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் – வேளாண்மை துறை
- கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் – வருவாய்துறை,
- தங்கம் தென்னரசு – தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை,
- ரகுபதி – சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை,
- முத்துசாமி – வீட்டுவசதி துறை,
- பெரிய கருப்பன் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை ,
- அன்பரசன் – ஊரகத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்துறை,
- மு.பெ.சாமிநாதன் – செய்தி விளம்பரத்துறை,
- கீதா ஜீவன் – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை,
- அனிதா ராதா கிருஷ்ணன் – மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை,
- ராஜ கண்ணப்பன் – போக்குவரத்துத்துறை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியானது..! pic.twitter.com/05Vbzx48GX
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 6, 2021