#BREAKING: வேட்புமனு தாக்கல் செய்த மு.க ஸ்டாலின்..!

Default Image

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனால், அரசியல் கட்சியினர் ஒருபுறம் வேட்புமனு தாக்கல் மறுபுறம் வேட்பாளர்கள் அறிவிப்பினை அறிவித்து வருகின்றனர். பல கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, இன்று நாள் முகூர்த்த நாளாக உள்ளதால் பல முக்கிய வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார். அயனவரத்தில் 6-வது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஏற்கனவே ஸ்டாலின் கடந்த 2011, 2016 ஆகிய தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். 2016-ஆம் கொளத்தூர் தொகுதியில் 37,850 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 1984-ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 தேர்தல்களை சந்தித்த ஸ்டாலின் 2 முறை தோல்வியை சந்தித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியிலும், அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும், சீமான் திருவொற்றியூர் தொகுதியிலும், டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியிலும் ,கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனும், அதே தொகுதியில் வானதி சீனிவாசனும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்