#BREAKING: கொரோனா வார்டில் சிகிச்சை பெறுபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!
கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் கொரோனா நோயாளிகளுக்காக, திருப்பூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 மருத்துவ படுக்கைகள் மற்றும் 20 கார் ஆம்புலன்ஸ் பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.
பின்னர், முதல்வர் ஸ்டாலின் கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிபிஇ கிட் அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.