வாணியம்பாடியில் மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்துள்ளனர்.
கடந்த 26ம் தேதி வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த இம்தியாஸ் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் கஞ்சா இருப்பதாகக் தகவல் கிடைத்ததை தொடர்ந்து, காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது, 9 கிலோ கஞ்சா, மூன்று கத்திகள், 10 கைபேசிகள் ஆகியவற்றைக் கைப்பற்றி, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா குறித்த தகவலை மஜக நிர்வாகி வசீம் அக்ரம்தான் காவல் துறையினருக்குக் கூறியது என்று இம்தியாஸ் கூறியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, கடந்த 10ம் தேதி வசீம் அக்ரமை வழிமறித்து, மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டியதால், அதே இடத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலை வழக்கில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரைச் சிறந்த பிரசாத் மற்றும் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த டெல்லி குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டது. இந்த நிலையில், வாணியம்பாடியில் வசீம் அக்ரம் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்துள்ளனர். அதன்படி, நயீம் பாஷா, பைசல் அகமது, யூசப் ஜமால் மற்றும் முகமது அலி ஆகிய 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
வாணியம்பாடியில் வசீம் அக்ரம் கொலை வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 7 பேர் நீதிமன்றங்களில் சரணடைந்தனர் என்பது குறிப்பித்தக்கது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…