#BREAKING: “மின்னல் ரவுடி வேட்டை” 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது – டிஜிபி சைலேந்திர பாபு
தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 முக்கிய ரவுடிகள் கைது.
தமிழ்நாடு முழுவதும் போலீசார் நடத்திய ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 133 முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 133 பேரில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர் மற்றும் மின்னல் ரவுடி வேட்டையில் பல ஆண்டுகளாக போலீசாரிடம் பிடிபடாமல் இருந்த 13 ரவுடிகளும் தற்போது பிடிபட்டனர். தமிழ்நாடு முழுவதும் மின்னல் ரவுடி வேட்டை தொடரும் என்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள 105 ரவுடிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.