#BREAKING: ஆஜராக அவகாசம் கோரும் அமைச்சர் செந்தில் பாலாஜி!!
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதற்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த புகாரில் வழக்கு தொடுக்கப்பட்டியிருந்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு 3 வழக்குகளை பதிவு செய்த நிலையில், ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. மேலும், 2 வழக்குகளில் பண மோசடியை மையமாக வைத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக ஆக.9ல் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில், வழக்கு விசாரணைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆஜராக அமலாக்கத்துறை ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை முன் ஆஜராக ஒரு மாதம் அவகாசம் கோரி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம் அனுப்பியுள்ளார். சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க உள்ளதால் ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என தெரிவித்துள்ளார்.