தகைசால் தமிழர் திரு.சங்கரய்யா அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுத்துள்ளார். இதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களும் ஆளுநர் ஒப்புதல் வழங்காததற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுத்த ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காமல் அமைச்சர் பொன்முடி விழாவை புறக்கணித்துள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் இந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி கலந்து கொள்ள உள்ளதாக அவரது பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், அவர் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…