#BREAKING : தமிழக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்..!
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
வேளாண் பட்ஜெட் தாக்கல்
இந்த நிலையில், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். தோளில் பச்சை துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.
சங்க இலக்கியம் மற்றும் திருக்குறளில் இடம்பெற்றுள்ள வேளாண் குறித்த கருத்துக்களை தெரிவித்து, பட்ஜெட்டை வாசித்து வருகிறார். அதில் தமிழகத்தில் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. மண்வளம் மங்காமல் இருக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.