#BREAKING : கேரள அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கடிதம்..!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கேரள அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு கேரள அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி அக்கடிதத்தில், முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்காக 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி தரவேண்டும் என்றும், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கத்தை அளவிடும் கருவிகளை அமைக்க கேரள வனத்துறை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவை விரைந்து நிறைவேற்ற கேரள அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகளுக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல கேரள வனத்துறை தாமதப்படுத்தி வருதாகவும், இப்பிரச்னையில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்வுகான வேண்டுமெனவும் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025