#BREAKING: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கை விசாரிக்க தடை!
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2001-06ல் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவை எதிர்த்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார்.
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக 2020-ல் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை எதிர்த்து அனிதா ராதாகிருஷ்ணன் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.