மேட்டூர் அணையில் இருந்து 8 வருடங்களுக்கு பிறகு ஜூன் 12 ஆம் தேதி குறுவை பாசனத்துக்காக திறக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் கடந்த 2011 -ம் ஆண்டு குறுவை பாசனத்துக்காக ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு, மேட்டூர் அணையில் போதிய நீர் வரத்து இல்லாததால் 8 ஆண்டுகளாக குறுவை பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன்பின் இந்த 8 ஆண்டுகளிலும் காலம் கடந்து ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. பின்னர் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பருவத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 100.19 அடியாக உள்ளது.
இந்நிலையில், குறுவை சாகுபடிக்குச் சாதகமான சூழ்நிலை இருப்பதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதைதொடர்ந்து, இன்று மேட்டூர் அணை நீர் திறப்பு குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதில், டெல்டா மாவட்ட அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின் திட்டமிட்டபடி ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேட்டூர் அணை திறக்கப்படுவதால் இந்த முறை முப்போகம் சாகுபடி செய்யமுடியும். 3.25 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடந்தால் சுமார் 5.50 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் வரவாய்ப்புள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் பாசன வாய்க் கால்களை விரைவாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து மேட்டூர் அணையில் தற்போதுள்ள நீர் 50 நாட்கள் பாசனத்திற்கு திறந்துவிட போதுமானது என்றும் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டிஎம்சியாகவும் இருப்பதால் அணை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…