#BREAKING: நாளை முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ சேவை நீட்டிப்பு .!
மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் இரவு 9 மணி வரை நீட்டிப்பு.
சமீபத்தில் மத்திய அரசு நான்காம் கட்ட தளர்வுகளை அறிவித்தது. அதில் மெட்ரோ ரயில்களை இயக்கலாம் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதன்படி நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மெட்ரோ ரயில் காலை 7 மணி முதல் தொடங்கி இரவு 8 மணி வரை இயங்கி வந்தது. தற்போது ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.