#BREAKING:முதலமைச்சர் முன்னிலையில் ரூ.15128 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்.!
தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான 17 நிறுவனங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் ரூ.15128 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஜெர்மனி, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து. இதில், 9 நிறுவனங்கள் நேரடியாகவும், எட்டு நிறுவனங்கள் காணொளி மூலமாகவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் தமிழகத்தில் 47 ஆயிரத்து 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 41 நிறுவனங்களுடன் 8,000 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.