மேகதாது அணை குறித்து விவாதிக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற கட்சிகளின் கூட்டம் தொடங்கியது.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விவசாயிகளின் நலனை காக்க அனைத்து தரப்பினரின் கருத்தை பிரதிபலிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். கர்நாடக அணை கட்டுவதை தடுப்பது குறித்து அனைத்து கட்சிகளின் கருத்துக்களை கேட்டறிகிறார் முதல்வர் முக ஸ்டாலின். கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறி வரும் நிலையில், ஆலோசனை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…