மே 8-ஆம் தேதி சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் நடத்தப்பட உள்ளது என அறிவிப்பு.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் வரும் 8ம் தேதி மீண்டும் மெகா சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அதன்படி, ஒரு லட்சம் இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். முதல் மற்றும் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுமார் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றும் தடுப்பூசி செலுத்தாதவர்களை தனித்தனியே சந்தித்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் மட்டும் அல்ல சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன் உள்ளிட்ட உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தொற்று எண்ணிக்கை 21 வரை குறைந்து தற்போது 39 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பலர் வடமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். வடமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் வெளி மாநில தொழிலாளர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்தால் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…