#BREAKING: தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர்!
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜார்ஜ் கோட்டைக்கு பதில் கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் முதன்முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ்தாய் வாழ்த்து நேரடியாக பாடப்பட்டது.
தமிழக அரசின் இசை கல்லூரியை சேர்ந்த பணியாளர்கள் தமிழ்தாய் வாழ்த்து பாடலை பாடினர். இதன்பின் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக ஆளுநர் என்ஆர் ரவி உரையாற்றி வருகிறார். அப்போது, ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து பேச வாய்ப்பளிக்க மறுத்ததால் அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. மேலும், நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.