#BREAKING: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Default Image

மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் என அமைச்சர் பேட்டி.

டெல்லி சென்றுள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஆயுஷ்துறை அமைச்சர் சர்பானந்த சோன வால் ஆகியோரை சந்தித்து மருத்துவக் கல்லூரி, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக வலியுறுத்தி, அதற்கான மனுவும் அளித்தார்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இல்லை. இந்த 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க பரிசீலிக்கப்படும். மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

இதுபோன்று தமிழ்நாட்டில் மேலும் 32 மாவட்டங்களில் செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க அனுமதி கோரியுள்ளோம். சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க மாதவரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் போன்று அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனம் அமைக்கப்படும் என உறுதியளித்தார். நாமக்கல் மாவட்டத்தில் 50 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 100 சித்தா, ஆயுஷ் நலவாழ்வு மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடங்க விரைந்து நடவடிக்கை அடுக்கவும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் நீட் தேர்வில் இருந்து விளக்கு அளிக்க வேண்டிய அவசியத்தையும் மத்திய அரசிடம் பட்டியலிட்டுள்ளோம் என கூறிய அமைச்சர், உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணவும் வலியுறுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்