மசாஜ் நிலையங்களில் சோதனையிட உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் உண்டு என உயர் நீதிமன்றம் உத்தரவு.
சென்னை அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் மசாஜ் நிலையம் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து, உரிமையாளர்கள் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்ததது நீதிமன்றம். இந்த தடையை நீக்கக்கோரி காவல்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, சுதந்திரமாக தொழில் நடத்தும் உரிமையில் போலீஸ் தலையிட முடியாது என்றும் விபச்சார தடுப்பு அதிகாரிக்கு தான் சோதனை நடத்த உரிமை உள்ளது. உள்ளூர் போலீசுக்கு அதிகாரம் இல்லை எனவும் மசாஜ் சென்டர் உரிமையாளர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை தரப்பு கூறுகையில், அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும்போது, காவல்துறை வேடிக்கை பார்த்து பார்த்துக்கொண்டிருக்காது என தெரிவித்ததை அடுத்து, மசாஜ் நிலையங்களில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக புகார் வந்தால் சோதனை மேற்கொள்ள உள்ளூர் போலீசாருக்கு அதிகாரம் உண்டு என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…