#BREAKING : ஆணவக்கொலை – ஒருவருக்கு தூக்கு, 12 பேருக்கு ஆயுள் தண்டனை…!

கண்ணகி – முருகேசன் ஆணவக்கொலை விவகாரத்தில், ஒருவருக்கு தூக்கு தண்டனையும், மீதமுள்ள 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2003 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி, விருதாச்சலத்தில் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த கண்ணகி – முருகேசன் ஆகிய இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில், உறவினர்களால் ஆணவக்கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், மூக்கு,காது வழியாக விஷத்தை ஊற்றி இரண்டு பேரையும் உயிருடன் எரித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து, குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனையும், மீதமுள்ள 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, பெண்ணின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.