#BREAKING: மார்ச் 10 முதல் 12 வரை ஆட்சியர்கள், எஸ்பிக்கள் மாநாடு – தமிழக அரசு அறிவிப்பு
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு தரப்பில் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிந்துக்கொள்ளவும், அவற்றை சிறப்பாக செயல்படுத்தவும் முதலமைச்சர் தலைமையில் மாநாடு நடைபெற உள்ளது. மார்ச் 10-12ம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் முதல் முறையாக வனத்துறை அலுவலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களின் செயல்பாடு மற்றும் அவற்றை விரைந்து செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. 3 நாள் நடைபெறும் மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்ட – ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் குறித்தும், வரும் ஆண்டுகளில் மக்களின் தேவைகளை ஆட்சியர்கள் மூலம் அறிந்து திட்டங்களை கொண்டுவர ஆலோசனை நடைபெற உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு தமிழ்நாடு அரசு அறிவிப்பு#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/J4aQsevppi
— TN DIPR (@TNDIPRNEWS) March 5, 2022