#breaking: மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி.!
கொரோனா தடுப்பூசி குறித்து பேசியதாக பதிவான வழக்கில் மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானதை தொடர்ந்து, மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் மன்சூர் அலிகான் மீது வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புகாரின் அடிப்படையில் மன்சூர் அலிகான் மீது, உயிருக்கு ஆபத்தான தொற்று பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல், கலகம் செய்ய தூண்டிவிடுதல், பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, வழக்கில் கைது செய்வதில் இருந்து விலக்கு பெற முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடு செய்துள்ளது. முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் முழுமையாக இல்லை என்பதால் புதிய மனு தொடர உத்தரவு பிறப்பித்துள்ளது.