#BREAKING: அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபம் – முதலமைச்சர் அறிவிப்பு

Default Image

வட சென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு.

அயோத்தி தாசப் பண்டிதரின் 175-ஆவது ஆண்டு விழாவையொட்டி வடசென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழர், திராவிடம் ஆகிய வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழி புலவர் அயோத்தி தாசப் பண்டிதர் என முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக அரசியலை தமிழர், திராவிடம் என்ற சொற்களின்றி நடத்த முடியாது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு சட்டப்பேரவையில் இருக்கக் கூடிய விடுதலை சிறுத்தைகள், பாமக, வேல்முருகனின் வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் வரவேற்றுள்ளனர்.

மேலும் அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபம் வட சென்னையில் எந்த இடத்தில் அமைக்கப்படும், எத்தனை கோடி செலவில் கட்டப்படும் என்று வரும் நாட்களில் தமிழக அரசால் அரசாணை வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்