#BREAKING: காவலர் தேர்விலும் ‘தமிழ் தகுதி தேர்வு’ கட்டாயம் – தேர்வாணையம் அறிவிப்பு

தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் காவலராக முடியும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.
காவல் பணிக்கான எழுத்து தேர்விலும் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் காவலராக முடியும் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சில அரசு ரீதியிலான தேர்வுகளுக்கு தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டியிருந்த நிலையில், தற்போது காவலர் பணிக்கான எழுத்து தேர்விலும் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்ட்டுள்ளது.
தமிழ் தகுதி தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் எடுத்தால் மட்டுமே காவல் பணிக்கான எழுத்து தேர்வு கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வுக்கும் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் காவலர்களுக்கான தேர்வுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அதேபோல உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வும், இந்த தேர்வாணையம் நடத்தி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025