#BREAKING: உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டி – கமல்ஹாசன் அறிவிப்பு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோம்பர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கி உள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் என தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதன்படி, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தேர்தல் நடக்கும் 9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன் என்றும்
களத்தில் சந்திப்போம், வெற்றி நமதே எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, சரத்குமார் மற்றும் பாரிவேந்தர் உள்ளிட்டவர்களுடன் கூட்டணி வைத்து களம் கண்டதில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த சூழலில் தனித்து போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
மேலும், அதிமுக கூட்டணியிலிருந்து பாமக ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதுபோன்று அமமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பித்தக்கது.
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது.
9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.
களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே.— Kamal Haasan (@ikamalhaasan) September 16, 2021