#BREAKING: “பெரும்பான்மையானவர்கள் ஈபிஎஸ்க்கு ஆதரவா?” – நீதிபதி
பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஈபிஎஸுக்கு ஆதரவாக உள்ளார்களா? என நீதிபதி கேள்வி.
பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன்பு நடைபெற்று வருகிறது. அப்போது, பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஈபிஎஸுக்கு ஆதரவாக உள்ளார்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் தரப்பு, 2,665 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை மட்டும் வைத்து ஒட்டுமொத்த 1.50 கோடி தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
பொதுக்குழு குறித்து தொலைகாட்சி, பத்திரிக்கை மூலமாக தெரிந்து கொள்வது ஏற்று கொள்ள முடியாது. முறையாக நிகழ்ச்சி நிரல் தயாரித்து உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக எந்த தீர்மானமும் ஜூன் 23 பொதுக்குழுவில் முன் வைக்கப்படவில்லை. காலி இடத்தை ஏற்படுத்தி அதிமுக தலைமை இடத்தை பிடிக்க முயன்றனர். ஓபிஎஸ் தரப்பு வாதம் வைக்கப்பட்ட நிலையில், பொதுக்குழு எதிரான வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.