#BREAKING : முதன்மை கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை …!

Default Image

தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், அனைத்து  கல்வி அதிகாரிகளுடன், சென்னை பள்ளி கல்வித்துறை வளாகத்தில் இருந்து காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், அனைத்து  கல்வி அதிகாரிகளுடன், சென்னை பள்ளி கல்வித்துறை வளாகத்தில் இருந்து காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர்கள்  நலன் சார்ந்த விஷயங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்