#BREAKING: தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பதவியேற்றார்!
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எம்.துரைசாமி பொறுப்பேற்றார்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பதவியேற்று கொண்டார். தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் பணி ஓய்வு பெற்றதை அடுத்து துரைசாமி பதவியேற்று கொண்டார். உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற துரைசாமி செப்டம்பர் 21-ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி பொறுப்பேற்றார். முதலில் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், பிறகு தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். நேற்றுடன் அவருக்கு 62 வயது நிறைவடைந்ததையடுத்து நேற்று மாலையுடன் பணி ஓய்வு பெற்றார்.
இதனிடையே, உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, இன்று எம்.துரைசாமி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.