#BREAKING: உரிய மதிப்பு இல்லனா தனித்து போட்டி., நாளை முக்கிய அறிவிப்பு – பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பு அளிக்காவிட்டால் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்த் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்களுடன் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பு அளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து நாளை முக்கிய முடிவை கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.