#breaking: தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்.!
7 உட்பிரிவு சாதியினரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது, 7 பட்டியலின உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என ஒரே பெயரை அழைப்பதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் என 7 பட்டியலின உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அழைப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, தமிழர்களுக்காக ஆதிதிராவிடர் பட்டியலில் திருத்தம் கொண்டுவரும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு நிறைவேறியுள்ளது.
மக்களவையில் தேவேந்திர குல வேளாளர் மசோதா நிறைவேறியதை அடுத்து மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.