#BREAKING : உள்ளாட்சித் தேர்தல் – காலை 9 மணி நிலவரம் வெளியீடு

Default Image
  • இன்று 2-ம் கட்ட தேர்தல்  நடைபெற்று வருகிறது.
  • 2-ம் கட்ட தேர்தலில்  10.41 %  வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27  மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல்  2 கட்டங்களாக நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி காலியாக உள்ள 91,975 பதவி இடங்களுக்கு முதற்கட்ட தேர்தலில் 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

இதனையயடுத்து இன்று  46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தல்  நடைபெற்று வருகிறது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு   மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.41 %  வாக்குகள் பதிவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்