#BREAKING: கனியாமூர் மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்பு – அமைச்சர்
கனியாமூர் பள்ளியின் 9, 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புகள்.
கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியின் 9, 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கனியாமூர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வேறு பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் மாணவ, மாணவிகளின் மன அழுத்தத்தை போக்க விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேரும் மாணவ, மாணவிகளிடம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இதனிடையே, அண்மையில் கனியாமூர் வன்முறையில் சேதமடைந்த தனியார் பள்ளியை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்பி ஆகியோருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
இதன்பி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மாணவி உயிரிழப்பை தொடர்ந்து கலவரத்தில் சூறையாடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடக்கும் என்றும் பெற்றோர் – ஆசிரியர் கழகத்தின் சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.