சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 7ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த 2018 ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை தொடர்ந்து 6 மாதங்கள் இவர்கள் ஒருவர் பின் ஒருவராக அந்த சிறுமியை வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இது தொடர்பாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 11 பேரையும் கைது செய்தது போலீசார்.சிறுமியின் தாய் அளித்த புகாரில் போக்ஸோ, கொலை முயற்சி, கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.பின்னர் இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கைதானவர்களில் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாபு என்பவர் மரணமடைந்தார்.இந்நிலையில் இது தொடர்பாக சென்னை சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு மீதான விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில்,பிப்ரவரி 1-ஆம் தேதி நீதிபதி மஞ்சுளா தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.மரணமடைந்த ஒருவரை தவிர மீதமுள்ள 16 பேர் மீது தீர்ப்பு வழங்கப்படுகிறது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…