சீருடடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியை தருகிறது என நீதிபதிகள் வேதனை.
பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும், இல்லையெனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். சீருடடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியை தருகிறது. பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை பார்க்கும்போது, நாடு எங்கு சென்றுகொண்டிருக்கிறது என தெரிவியவில்லை என்று நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும், இல்லையெனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே மது அருந்தும் பழக்கத்தில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இரவு நேரங்களிலும் செயல்படுவதால், ஏரளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. பல இடங்களில் மதுக்கடைகளை மூட கோரி போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இருப்பினும் மது இறப்பினை குறைந்தபாடு இல்லை. தமிழகத்தில் 21 வயதிற்கு கீழ் இருப்பவர்களுக்கு மதுமான விற்க தடை விதிக்க வேண்டும். மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிவிப்புகலை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும்.
அதேபோல் மதுக்கடைகளில் விலை பட்டியல் வைக்க வேண்டும், ரசீது வழங்க வேண்டும். மேலும், தமிழகத்தில் டாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை மத்திய 2 மணி முதல் 8 மணி வரை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மாணவர்கள் சீருடையுடன் மது அருந்துவது தொடர்பாக புகைப்படம் வழங்கப்பட்டது. வழக்கை தொடர்ந்த மனுதாரரை பாராட்டிய நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக கருத்துக்களை தெரிவித்து வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…