ஆகஸ்ட் 1-ஆம் தேதி தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தலைமையில் நடைபெற கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அதிகாரிக்கு கடிதம்.
ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வரும் ஆக.1-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
இதனையடுத்து, இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்த நிலையில், அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு முன்னதாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் புதியதாக நியமனம் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்துக்கு மாறி மாறி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…