#BREAKING: தமிழகத்தில் 30,000க்கும் கீழ் குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 47 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 37,359 ஆக அதிகரிப்பு.
தமிழகத்தில் ஒரே நாளில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த நாட்களாக 30 ஆயிரத்திக்கும் மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து, 29,976 ஆக உள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 32,24,236 ஆகவும், கடந்த 25 மணி நேரத்தில் 47 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,359 ஆகவும் உள்ளது.
ஒரேநாளில் 1,50,931 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 27,507 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்த 29,73,185 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,13,692 ஆக காணப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் சென்னை – 5,973, கோயம்புத்தூர் – 3,740, செங்கல்பட்டு – 1,883, திருப்பூர் – 1,787, சேலம் – 1,457, ஈரோடு – 1,302 ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.