#BREAKING: ஜனவரி 7 வரை மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டு நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்குழு தகவல்.
இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.7-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நாளை, நாளை மறுநாள் விவாதம் நடக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் 7-ஆம் தேதி பதிலுரை அளிக்கிறார். கொரோனா தொற்று காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும். சட்டப்பேரவையில் கேள்வி நேரம், முதல்வர் பதிலுரை நேரலை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.