அரசு அனுமதி அளிக்கப்படாத நிலையில் கிராமசபை கூட்டம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 18 வயது நிரம்பிய வாக்களிக்கும் உரிமை கொண்ட மக்களை உள்ளடக்கிய கிராம சபை அமைக்கப்பட்டுள்ளது. கிராம சபை தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி அமைக்கப்படும் நிர்வாக அமைப்பாகும். இந்த நிலையில், சில அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் மக்களை குழப்புவதற்காக அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன.
இது ஊராட்சிகள் விதிமுறைகளுக்கு முரணானது மட்டும் அல்லாமல் அந்த அமைப்பை இந்த நடவடிக்கை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது. கிராம சபையினை கூட்டும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு மட்டுமே உள்ளது. கிராம சபை கூட்டுவதற்கு அரசால் அனுமதிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரை பயன்படுத்தி இது போன்ற அரசியல், பொதுக்கூட்டம் கூட்டினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, திமுக தலைவர் முக ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்களை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் சுமார் 16,000 கிராம சபைக் கூட்டங்களை திமுக தொடங்க உள்ளதாக திட்டமிட்டுள்ளது. அதன்படி, நேற்று அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் ஒன்றியம் குன்னம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…