ஏற்கனவே 23 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தருமபுரி,பெரம்பலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் பள்ளி செல்லும் மாணவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னதாக,பெரம்பலூர் மாவட்டத்தில் எட்டாம் வகுப்பு வரை இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.உயர்நிலை,மேல்நிலை வகுப்புகளுக்கு சூழலைப் பொறுத்து தலைமையாசிரியர்கள் விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே,கீழ்க்கண்ட 18 மாவட்டங்களில் இன்று பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறையும்,5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி,
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, நெல்லை, குமரி,நாகை, மயிலாடுதுறை,விழுப்புரம்,திருவாரூர், கள்ளக்குறிச்சி,கடலூர், விருதுநகர்,தென்காசி,தேனி,திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
மேலும்,திருவண்ணாமலை,ராணிப்பேட்டை,அரியலூர்,வேலூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல,புதுச்சேரி,காரைக்காலில் இன்றும்,நாளையும் பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…