#BREAKING: மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பி ஆகிறார் எல்.முருகன்.!

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வாகிறார் மத்திய இணை அமைச்சர் எல் முருகன்.
மத்திய இணை அமைச்சராக உள்ள எல் முருகன், மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்தபோது, தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், அசாம் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதில், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது.
மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், மத்திய பிரதேச மாநிலங்களவை எம்பியாக எல் முருகன் தேர்வாக உள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025