தமிழகத்தில் தடையை மீறி 3-வது நாளாக செங்கல்பட்டில் வேல் யாத்திரை நடத்தியதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உட்பட பாஜக நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்தனர்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 6 ஆம் தேதி வரை பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வேல் யாத்திரை நடத்த தமிழக அரசு யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், பாஜக சார்பில் தடையை மீறி திட்டமிட்டபடி வேல் யாத்திரை இன்று 3வது நாளாக நடத்தினர்.
அதன்படி, முதல் நாளாக கடந்த 6 ஆம் தேதி தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதற்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட நிர்வாகிகள் பலரை திருத்தணியில் போலீசார் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.அந்த வகையில், நேற்று இரண்டாம் நாளாக கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் வரை வேல் யாத்திரை நடைபெற்றது. ஆனால், பாஜக தலைவர் எல்.முருகன், இல.கணேசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் திருவொற்றியூரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடிவிக்கப்பட்டனர்.இந்நிலையில், இன்று செங்கல்பட்டில் தடையை மீறி வேல் யாத்திரைக்கு புறப்பட்ட பாஜக மாநில தலைவர் எல்.முருகன் 3-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…