குட்கா ஊழல் வழக்கில் டிசம்பர் 2-ஆம் தேதி முன்னாள் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறைசம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் குட்கா புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா தயாரிப்பு ஆலைகள் இயங்க அனுமதிப்பதாக புகார்கள் எழுந்தது.
இந்த நிலையில் குட்கா விற்பனை மூல ரூ.639 கோடிக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்து,விசாரணை மேற்கொண்டு வருகிறது .இதனையடுத்து குட்கா ஊழல் வழக்கில் டிசம்பர் 2-ஆம் தேதி விசாரணை நடத்த முன்னாள் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.மேலும் கூடுதல் ஆணையர் தினகரனுக்கு டிசம்பர் 3-ஆம் தேதி விசாரணை நடத்த ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.
சிபிஐ இந்த குட்கா வழக்கில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.மேலும் குட்கா வழக்கில் உரிமையாளர்கள்,பங்குதாரர்களின் ரூ.246 கோடி சொத்துக்கள் ஏற்கனவே முடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…