#Breaking:கோடநாடு கொலை வழக்கு – நாளை சசிகலாவிடம் விசாரணை!
கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோடநாடு கொலை,கொள்ளை, தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். அதே சமயம்,கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் உள்பட 202 பேரிடம் விசாரணை என்பது தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது.
இந்நிலையில்,கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக விகே சசிகலாவிடம் நீலகிரி தனிப்படை காவல்துறையினர் நாளை காலை விசாரணை நடத்தப்படவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி,கோடநாட்டில் இருந்த சொத்துக்கள்,காணாமல் போன பொருட்கள் தொடர்பாக சசிகலாவிடம் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.மேலும்,கோடநாடு எஸ்டேட்டில் காணமல் போன நிலப்பத்திரங்கள்,இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் செல்போனில் இருந்தது குறித்தும் விசாரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் விசாரணை நடத்தப்பட்டது.அதைப்போல, அதிமுக நிர்வாகி ஆறுக்குட்டி,அவரது குடும்ப உறவினர் மற்றும் உதவியாளர்களிடம் விசாரணை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.