#Breaking:கோடநாடு கொலை வழக்கு:சசிகலாவிடம் தொடங்கிய விசாரணை!

நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை,கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை 217 பேரிடம் காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.
இந்நிலையில்,கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னையில் சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது.சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கோடநாடு பங்களாவில் என்னென்ன இருந்தன என்பதை நன்கு அறிந்தவர் சசிகலா என்பதன் அடிப்படையில் அவரிடம் நீலகிரி எஸ்பி ஆஷிஷ் ராவத்,ஏடிஎஸ்பி கிருஷ்ண மூர்த்தி மற்றும் பெண் போலீசார் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும்,கோடநாடு எஸ்டேட்டில் காணமல் போன நிலப்பத்திரங்கள் சென்னையில் ஒரு ஹோட்டலில் இருந்தது குறித்தும்,குறிப்பாக அந்த நிலப்பத்திரங்களின் விவரங்கள், புகைப்படங்கள் ஆகியவை இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் செல்போனில் இருந்தது குறித்தும் சசிகலாவிடம் விசாரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024