கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
மறைந்த முன்னாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து உதகை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இந்த வழக்கை தொடர்பாக விசாரிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடைகோரி அனுபவ் ரவி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தின் அனுமதி இன்றி மறுவிசாரணை நடத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைத்தனர்.
மறு விசாரணை நடத்திக்கொண்டே போனால் வழக்கின் விசாரணை முடிவு இல்லாமல் தான் செல்லும் என்றும் வாதமாக வைத்தனர். இதனையடுத்து, கோடநாடு வழக்கில் மறு விசாரணை விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கோடநாடு விவகாரம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது போல் உள்ளது என்றும் மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை எனவும் கூறி கோடநாடு வழக்கில் மறுவிசாரணைக்கு தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
ஏற்கனவே சாட்சி அனுபவ் ரவியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றமும் தள்ளுபடி செய்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் மேல் விசாரணைக்கு தடை இல்லை என கூறியுள்ளது.
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…