கோடநாடு வழக்கில், அரசு தரப்பில் கூடுதல் விசாரணைக்கு கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த 27ம் தேதி சயான் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானதை தொடர்ந்து, விசாரணையின் போது, புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென அரசு தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடநாடு வழக்கின் விசாரணையை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து, கோடநாடு வழக்கு இன்று மீண்டு உதகை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, சயான், மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த விசாரணை முடிந்து, செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்ததாக தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த விசாரணையின் போது, புலன் விசாரணை நடைபெறுவதால் அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கோரப்படியிருந்தது. அதன்படி புலன் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்தார்.
அந்த விசாரணையில் புலன் விசாரணையை தொடரலாம் என்றும் காவல்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்தார். அதன்படி, மேல் புலன் விசாரணை தொடங்கி உள்ளது. அதனால் இன்று நடைபெற்ற விசாரணையில், புலன் விசாரணை நடத்த கால அவகாசம் வேண்டும் என நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது என கூறினார்.
சம்பவ நடந்த நாளன்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், விசாரணை அதிகாரிக்கு சம்பவம் குறித்து தெரிவதற்கு முன் தடயவியல் நிபுணர் சம்பவ இடத்திற்கு சென்றது முரணானது எனவும் தெரிவித்தார். கோடநாடு வழக்கில் பல விஷயங்கள் மர்மமாக உள்ளதால், முழுமையான புலன் விசாரணை செய்யவேண்டி உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…